திரியேசு நாதா வந்திடுமே
thiriyesu naadhaa vandhidumae
திரியேசு நாதா! வந்திடுமே தீபமே ஆவி தந்திடுமே - திரி
திரிலோக தியாகனே தீன தயாளனே தினம் தினம் ஏழையேன் தேவப்பண் சாற்றவே - திரி
1. மின்னொளி மா செளந்தரியனே மின்னல்லா மழையுண்டுமோ? மென்மேலும் மற்றும் மின்னலின் மா மழை மின்னும் பிரஜோதியாய்க் கன்னல்கள் தீரவே - திரி
2. மங்கிடா நித்திய சூரியனே மா பாவி என்மேல் அன்பு கொண்டீர் மானுஷ்யவதாரா மாறாத பூஷ்ணா மன்னவா என்னையும் தம்மைப் போலாக்கவே - திரி
3. தூங்கிடா நித்திய காவல்காரன் தூங்கிய என்னை மீட்பதற்காக தொங்கினீர் கல்வாரி மூன்றாணி மீதிலே தூயனே காயனே நேயன் நான் ஆகவே - திரி
4. யாருண்டு சாரப் பூவுலகில் நாதன் நீரல்லால் வேறா இரண்டு? காருண்ய காந்தலே கண்ணே என் கண்ணாளா காணவும் ஏங்கிறேன் காதலனே சுவை - திரி
5. என்ன நான் செய்வேன், பிராண நாதா! எத்தனை மீட்ட திருவன்புக்காய்? ஏதேனின் வாசனே என் மணவாளனே என்றென்றும் ஏழையேன் தொண்டு செய் வேனை - திரி