திரியேகா திரு மகிபா
thiriyegaa thiru magibaa
திரியேகா திரு மகிபா திரியுலகின் பூரணா திவ்ய மகா நேயபரா- 2 துய்ய உம் வரமிகப் பெய்திடுவாய் -2
1. அன்புமிகும் இன்பசுகம் அமைந்திலங்கும் தாதையே -2 உம் புனிதம் நன்கருள்வாய் - 2 உமதடி தொழுதிடும் ஊழியர்க்கே -2
2. தேவசுதா ஏவைகதா தாரணியின் வானசுதா -2 ஜீவ விதை தூவிட உம் -2 சீடர் தம்மோடிருந் தாண்டருள்வாய் - 2
3. தாதை சுதன் தமிலுதிக்கும் தேவ மகா ஜீவ ஆவி -2 பாதைதனில் தூதனுப்பி - 2 பலன் மிக வரத்துணை புரிந்திடுவாய் - 2
4. தேவபிதா நின் சரணம் ஜீவ சுதா நின் சரணம் -2 தேவாவி நின் சரணம் -2 திரித்துவ மகத்துவா நின் சரணம் -2