தினம் தினம் இயேசு நாயகனை
thinam thinam yesu naayaganai
தினம் தினம் இயேசு நாயகனை மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன் மகிழ்ந்து பாடுவேன் ஆனந்தமாக என் நேசர்மார்பில் அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்
கருவில் என்னைத் தெரிந்து கொண்டு கருத்தாய் அவரைப் பாடவைத்தார்
வலையை எனக்காய் சாத்தான் விரிக்க வழியை மாற்றி அழைத்துச்சென்றார்
மன்னவர் இயேசு என்னுள் இருக்க மனிதன் எனக்கு என்ன செய்வான்
அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார் அல்லேலூயா பாடுகிறேன்