தினம் என்னை காக்கிறார்
thinam ennai kaakkiraar
தினம் என்னை காக்கிறார் அவர் உறங்குவதில்லையே தினம் என்னை காண்கிறார் அவர் உறங்குவதில்லையே தினம் என்னை நடத்துவார் அவர் உறங்குவதில்லையே தினம் பாதை காட்டுவார் அவர் உறங்குவதில்லையே
அவரே எந்தன் இயேசு புதுப்பாடல் பாடுவேன் அவரை போற்றுவேன் நடனங்கள் ஆடுவேன் இசைகீதம் முழங்குவேன் அவரே எந்தன் இயேசு
இருள் சூழும் பாதையில் வழிகாட்டும் ஒளி காரிருள் வேளையில் உலகத்தின் ஒளி யார் என்னை வெறுத்தாலும் நேசிக்கும் நண்பர் யார் என்னை மறந்தாலும் மறவாத மீட்பர்