தினம் எந்தன் சின்ன உள்ளம்
thinam endhan sinna ullam
தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே வருகையின் எக்காளத்தைக் கேட்கவே – 2
பல்லவி
பறந்து செல்ல ஆச ஆச இயேசுவோடு பேச பேச – 2
அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்குப் போதும் அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் கிரீடம் ஆகும் – 1
தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே வருகையின் எக்காளத்தைக் கேட்கவே – 1
1. கவலை இல்லை துயரம் இல்லை உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை – 2
சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி – 2 ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம் – 1
பல்லவி
பறந்து செல்ல ஆச ஆச இயேசுவோடு பேச பேச – 2
அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் கிரீடம் ஆகும் அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்குப் போதும் – 1
2. ஆறுதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன் – 2
வாடிய வேளையிலே தேடியே வந்தவரே – 2 அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே – 1
அல்லேலூயா பாட்டு பாடி விண்மீன்கள் கடந்து சென்று நேசர் இயேசு மடியில் அமர்ந்து அப்பாவின் மார்பில் சாய்வேன் – 1
அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்கு போதும் அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் கிரீடம் ஆகும் – 1