திக்கற்ற பிள்ளைகளுக்கு
thikkatra pillaigalukku
திக்கற்ற பிள்ளைகளுக்கு என் தெய்வம் துணையாய் இருப்பார் தீங்கு நாள் அணுகாமல் எங்களைக் காக்க வல்லவரே
சாத்தானை நீர் விரட்டி என்னை சந்தோஷப் படுத்தினீர் சர்வ வல்லவரே என்னோடு இருப்பார் சதாகாலம் ஸ்தோத்திரமே
கர்த்தரே காருண்யரே இன்று எங்களை இரட்சித்திடும் காலமெல்லாம் நம்மோடு இருப்பார் கர்த்தரே நமக்கு உதவி செய்வார்
மகிமையுள்ள தேவனை எம்மை மகிமைப்படுத்துவார் மங்கா ஒலியை தரித்துக்கொண்டு மாசற்ற வாழ்க்கை வாழ்ந்திடுவோம்
தேவனின் பரிசுத்தத்தை இன்று எனக்கு தருவார் தேற்றரவாளனே இன்னும் துணை தேவ சமூகத்தில் செய்திடுவோம்