திக்கற்ற பாவி நான் சீர் கெட்ட நீசனே
thikkatra paavi naan seer ketta neesanae
1. திக்கற்ற பாவி நான் சீர் கெட்ட நீசனே சொந்த கிரியை கந்தைதான் எந்தன் கதி யேசுவே.
கடனில்லையாம் தீர்ந்து போயிற்றே! யேசுவால் என் தீதெல்லாம் நிவிர்த்தி ஆயிற்று.
2. என் நேச ரட்சகா! உம் திரு ரத்தமே தீமை கறை மாசெல்லாம் நீங்கிவிடச் செய்யுமே.
3. எண் குணம் தீயதே என்றாலும் தேவரீர் மாசில்லாத ரத்தத்தால் சுத்த சுபாவம் அளிப்பீர்.