திகையாதே என்றும் கலங்காதே
thigaiyaadhae endrum kalangaadhae
திகையாதே என்றும் கலங்காதே திடன்கொள் இயேசு உன்னை நேசிக்கின்றார்
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல மனம் மாற கர்த்தர் மனு புத்திரனுமல்ல உம்மை என்றும் மறவார் உன்னைத் தேடி வருவார் உத்தம தேவன் ஜீவிக்கின்றார்
காலமெல்லாம் உன்னுடனே உடனிருந்து கரம் பிடித்து என்றும் வழி நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காப்பார் கர்த்தர் இயேசு ஜீவிக்கின்றார்
இரத்தத்தாலும் ஆவியாலும் வல்லமையாலும் சாத்தானை ஜெயித்திட கிருபை தந்த சத்தத்தோடே கூப்பிடு ஜெபத்தோடே தேடிடு நித்தம் ஓடிவந்து உதவிச்செய்வார்
தகப்பனும் தாயும் உன்னை தள்ளிவிட்டாலும் கைவிடாத தேவன் உன்னை சேர்த்துக்கொள்வார் காண்பவரும் அவரே காப்பவரும் அவரே கன்மலை இயேசு ஜீவிக்கின்றார்