திடம் என் நெஞ்சமே குற்றப் பயம் நீக்கு
thidam en nenjamae kutrap payam neekku
1. திடம் என் நெஞ்சமே குற்றப் பயம் நீக்கு இரத்தப் பலியே உன் பதிலாய் நோக்கு ஆசனமுன் மீட்பர் நிற்பார் என் பேர் தம் கையில் பதித்தார்.
2. என்றுமே ஜீவிப்பார் எனக்காய் ஜெபிக்க சர்வம் மீட்கும் நேசர் தம் இரத்தம் கூற மாந்தர் மீட்பின் அவ்விரத்தம் தெளிப்பார் கிருபாசனம்.
3. செந்நீர்க் காயம் ஐந்தும் கல்வாரி தோற்றுமே அவை பெலச் செபம் எனக்காய் ஊற்றுமே அவனை மன்னியும் என்றும் பாவி சாக விடாதிரும்!
4. பிதா அன்பாகக் கேட்பார் அபிஷேகன் ஜெபம் அவர் தள்ள மாட்டார் தம் மைந்தர் சமூகம் இரத்தம் ஆவியும் ஒன்றாய் சொல்லும் "தேவனால் பிறந்தீர்".