தெய்வீக ராகம் தேன்சிந்தும்
theyveega raagam thenjindhum
தெய்வீக ராகம் தேன்சிந்தும் ராகம் - 2 தேவா உன் நினைவாக உருவான ராகம் - 2 என் பாடல் தானே உன் கோயில் நாளும் அரங்கேறும் வேளை ஆனந்தமே உயிரே வருக உறவைத் தருக உயிரே உனக்காக உருவான பாடல் ! உறவே உனக்காக நான் பாடும் பாடல் ( 2 )
1. உன் நாமம் சொல்லாத நாளில்லையே ! எந்நாளும் நினைக்காத நெஞ்சில்லையே உன் நாமம் தானே நெஞ்சாரப் பாட சுகமான ராகம் நான் பாடும் பாடல் - உயிரே .
2. உன்னாட்சி உயராத இடமில்லையே உன்னாட்சி மலராத மனமில்லையே உன் அன்பைத் தானே நாள்தோறும் பாட மேலான ராகம் நான் பாடும் பாடல் - உயிரே