தெய்வம் மீண்டும்
theyvam meendum
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்-நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும் வல்லமை கொண்டவர் வருகையிலே-இங்கு நன்மைகள் நடப்பது சத்தியமே
நால் வகை வேதமும் பொருள் கூறும்-இயேசு நாதனின் மகிமையே அதில் சேரும்
வானமும் பூமியும் உறங்கி விடும்-தேவன் வார்த்தையே ஜீவனாய் இறங்கி வரும்
தேடிய செல்வங்கள் அழிந்து விடும்-தேவனை நாடிய உள்ளங்கள் உயிர்த்து விடும்
இயேசுவின் வருகையில் இவை நடக்கும்-வேதம் சொல்லிய வார்த்தைகள் பலித்து விடும்
நிட்சயம் கர்த்தரின் வருகை வரும்-உன் நித்திய வாழ்வுக்கு பதிலும் தரும்
பத்துக் கற்பனை வழிகளில் கருணை வரும் நம் அப்பனின் சத்தியம் நிலைத்து விடும்