தெய்வ கிருபையைத் தேடி
theyva kirubaiyaith thedi
1. தெய்வ கிருபையைத் தேடி பாவி மனந்திரும்பு மீட்பர் தரும் ரூடவ்வை நாடி தூக்கம் விட்டெழுந்திரு.
2. வாசலானதோ இடுக்கம் தாழ்மையாகி உட்படு ஜீவ வழியோ நெருக்கம் லோக நேசத்தை விடு.
3. மாம்சம் லோகம் ஆசாபாசம் பாவம் யாவும் அகற்றி யேசுவில் மெய் விசுவாசம் வைத்து உன்னை ஒப்புவி.
4. கர்த்தர் உன்னைத் தயவாக ஏற்றுக் கொண்ட பிறகு ஜெபத்தோடு விழிப்பாக அவரில் நிலைத்திரு.
5. ஜீவனுள்ள நாள்மட்டாக மோசங்கள் இருப்பினும் தேவகரம் பெலமாக உன்னைக் காத்து நடத்தும்.