தேற்றும் தேவன் நீரே
thetrum devan neerae
தேற்றும் தேவன் நீரே – என்னைத் தேற்றும் தேவன் நீரே என்னை ஏந்தினீர் என்னை தாங்கினீர் என்னை சுமந்து காத்தீரே
அன்பு மாறாதது இயேசுவின் அன்பு நிலையானது சொந்தங்கள் விலகிடும் உறவுகள் பிரிந்திடும் இயேசுவின் அன்பு மாறாதது
1. சுகம் தரும் தெய்வம் நீரே என்னை பெலப்படுத்தும் தேவன் நீரே பெலவீனம் யாவும் ஏற்றுக் கொண்டீர் உந்தன் தழும்புகளால் சுகமானேன்
2. கண்ணீர் துடைப்பவரே எந்தன் காயங்கள் ஆற்றினீரே வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்து என்னை உயிர்ப்பித்து காத்தீரே
3. விடுவிக்கும் தேவன் நீரே எந்தன் சாபங்கள் மாற்றினீரே சிலுவை சுமந்து உம் இரத்தம் சிந்தி எந்தன் நுகங்களை முறித்தீரே