தேசம் யாவுமே மோசமாகுதே
thesam yaavumae mosamaagudhae
தேசம் யாவுமே மோசமாகுதே - பாவ நாசம் செய்யவே யேசு வருகிறார்.
1. சொப்பனம் கண்டார் நேபுகாத்நேச்சார் சொப்பனத்தையும் அர்த்தத்தையுமே சொல்லி தந்திட ஆட்கள் தேடினார் சொல்ல யாருமே கல்தேயரில்லை.
2. தலைதான் தங்கமே மார்பு வெள்ளியே சிலையின் வயிறுமே வெண்கலமாமே இரும்புக் கால்களே பாதங்கள் மட்டும் இரும்பும் களிமண்ணும் கலந்து ஆனதே.
3. தங்கம் பாபிலோன் வெள்ளி பெர்சியா வெண்கலத் தொடை கிரேக்க தேசமே இரும்பு ரோமரே நாம் வாழும் காலம் இரும்பும் களிமண்ணும் கலந்த பாதமே.
4. களிமண் இரும்புமே கலவாதது போல் களிமண் மனிதனில் ஒற்றுமை இல்லை சண்டை எங்குமே ஐ.நா. சங்கத்தால் சண்டை நிறுத்தவே இயலவில்லையே.
5. சிலையின் பாதத்தில் விழுந்த கல் ஒன்று சிலையைத் தகர்த்து நிலையாய் நின்றது யேசு கிறிஸ்துவாம் அந்தக் கன்மலை யேசு வருகிறார் ஆயத்தம் ஆவோம்.