தேனிலும் மதுரம் வேதம் அல்லாமல்
thenilum madhuram vedham allaamal
1. தேனிலும் மதுரம் வேதம் அல்லாமல் ஏதுண்டு? சொல் கண்ணே - மிகச் சிற்றின்பம் அதனை நற்றாசை வைத்து தேடுவாயோ கண்ணே.
2. காலையில் பனிபோல் சாலொமோன் மகிமை கரைந்தது பார் கண்ணே - நேச கர்த்தரின் வசனம் எத்தனை இன்பம் காண்பாய் என் கண்ணே.
3. தோழி சங்கீத இனிமை நற்பாகின் சுவையும் இணையோ கண்ணே? - அருள் சுருதியின் வசனம் இருதயம் மகிழச் செய்திடும் என் கண்ணே.
4. நாற்பது நாளாய்த் தீப்பசிக்காளாய் நலிந்திட்ட போது யேசு - வெகு தாற்பரியத் தோடேய்த்த பசாசை ஜெயித்தார் இதனாலே.
5. தேனிலும் தேன் கூண் டொழுகல்கள் தனிலும் திவ்விய மதுரமாமே; - அது ஜீவனுக் கமிர்தம் ஆவிக்குச் சுகிர்தம் தினம் ருசித்திடு கண்ணே.