தென்றலைப் போல்
thendralaip pol
தென்றலைப் போல் என்னை சுற்றி நிற்கின்றீர் தேவாவியே வாழ்க பனித்துளிப் போல் என்னை நனைக்கின்றீரே பரிசுத்தாவியே வருக
நீர் வாழ்க நீர் வருக தேவ ஆவியே வருக
பரலோக மன்னாவை பொழியச்செய்தீர் பசிதனை நீக்கிவிட்டீர் ஜீவநதியோரமாய் நடத்திச் சென்று - என் தாத்தைத் தீர்ந்துவிட்டீர் - நீர் வாழ்க
புதுஎண்ணெய் என் சிரசில் வார்த்து அபிஷேகம் செய்கின்றீர் மகிமையின் மேகத்தில் இறங்கி வந்து உம் சமூகத்தால் மூடுகின்றீர் - நீர் வாழ்க
கரங்களால் என்னை நீர் மறைத்து கனிவுடன் பேசுகின்றீர் வரங்களால் என்னை நீர் நிறைத்து இமயசுவை உயர்த்துகின்றீர் - நீர் வாழ்க