தேடிய திருவடி
thediya thiruvadi
தேடிய திருவடி - இராக மாலிகை இராகம்: முகாரி
பிழையாயிரம் யான் இழைத்தாலும் தயை பிழையாது எனை விழையும் பேரன்பே பேரன்பே (பேரன்பே) பேரன்பே.
தவம் ஏதும் அறியேன் ஆனாலும் பெரும் தயை உனது இயல்பு என்பதறிவேனே பேரன்பே (பேரன்பே) பேரன்பே.
1. ஆண்டகை வாழின்ப வீடயர்ந்தேன் - தப்பி அல்லோடு நாlளோட நாடோடினேன். ஆண்டு பல்லாண்டுகள் தாண்டிச் சென்றேன் அவை அடர் வளை முகடுகள் பல கடந்தேன்.
இராகம்: சிந்து பைரவி
2. தளையுண்ட உள்ளந்தனை பணயம் வைத்தேன் - அந்த தலைவனின் பொருள் அதை விலை பகர்ந்தேன் துளையுண்ட திருவடி தொடர்ந்து வர நாயேன் தோண்டிய பவக்குழி தனில் ஒளிந்தேன்.
இராகம்: குந்தலவராளி
3. திம் தகி திம்மென தினம் தினமே அண்ணல் தேடிய திருவடி தொடர்ந்தொலிக்கும் நிம்மதி ஏதுனக்கு? ஏது நிறைவென்றும் நிலை புகல் ஏதுனக்கு என்னையல்லால்?
இராகம்: பேஹாக்
4. பற்றிடு என் கரந்தனை பயமின்றி புறப்படு என புரவலன் பகர்ந்தக்கால் சுற்றிய மாய துயிலகல கண்கள் சூரிய விடிவென புலர்ந்தனவே.
இராகம்: காப்பி
5. நீட்டிய கரங்களில் மாட்டிக் கொண்டேன் செந்நீரினில் மூழ்கினேன் தூய்மையுண்டேன் காட்டிய திரு நெஞ்சில் தலை சாய்த்தேன் அண்ணல் கருணைக் கடலதனில் பாய் விரித்தேன் பேரன்பே பேரன்பே பேரன்பே