தேடி வந்தார் தேடி
thedi vandhaar thedi
தேடி வந்தார் தேடி வந்தார் தேடி வந்தாரே தேவ சேனா அன்பின் ரூபமாய் - இயேசு தேடி வந்தாரே
1. காரிருள் சூழ்ந்த பாவ உலகின் வாரிதியில் அழியா தாரகையாக நின்று நேர் வழி காட்டிடும் மா வரும் இரட்சகராய் - தேடி
2. தேடுவாரின்றியே ஓடி அலை கையில் மேடுகள் மீதினிலே கூட்டி நல் மேய்ப்பராய் மந்தையில் சேர்த்து ஈ டேற்றிட நினைந்தவராய் - தேடி
3. பாரஞ் சுமந்த உள்ளம் நொந்தோரை புரிந்து ஏற்றிடவும் பொங்கிடும் வினை நீங்கிவிடும் தேவ ஆக்கினை ஏற்றவராய் - தேடி
4. ஆழி போல் ஆழ்ந்த அவர் தனத்தால் தாழ்ந்தவர் வாழ்விக்க வே ஏழ்மையின் கோலமே பூண்டவராயிந்த பாழுலகந்தனிலே - தேடி
5. ஜீவனுள்ள மா நம்பிக்கை யீயும் சீயோனின் தூதுகளால் நித்தியரான பிதாவின் நற்சாயலில் நித்தம் வளர்ந்திடவே - தேடி