தேடி வந்த அன்பு
thedi vandha anbu
தேடி வந்த அன்பு என் இயேசுவின் அன்பு தேடி வந்த அன்பு - என்னை தேற்றிடும் அன்பு நான் தொலைந்த போதும் விழுந்த போதும் தள்ளாத அன்பு- 2 அன்பு என் இயேசுவின் அன்பு-2 அன்புக்கு இணையான அன்பு உண்டோ
நான் உம்மை மறந்த போதும் நீர் என்னை மறக்க வில்லை உம் அனாதி ஸ்னேகத்தால் இழுத்துக் கொண்டீரே - 2 என் சத்துருக்களின் மத்தியில் ஒரு பந்தியை ஆயத்தம் பண்ணினீர் புது எண்ணெயால் அபிஷேகம் என் சிரசில் ஊற்றினீரே
காணாமல் போன ஆட்டை போலிருந்த என்னை தேடி வந்து கரம் பிடித்து தூக்கி எடுத்தீரே - 2 தூரத்திலே அறிந்த தகப்பன் நீரல்லவோ - என்னை மார்போடு அணைத்துக்கொண்டு வாழ வைத்தீரே
மனிதர் என்னை தள்ளியும் எத்தன் என்று வர்ணித்தும் நாள்தோறும் நிந்தித்தும் என்னை துக்கபடுத்தியும் - 2 எப்போதும் எந்நேரமும் என்னை விட்டுகொடுக்காமல் தாங்கினீர் ஏந்தீனீர் என்னை சுமந்து கொண்டீரே