தேடல் என்பதே
thedal enbadhae
தேடல் என்பதே வாழ்க்கை தான் தேடும் செல்வமே இயேசு தான் -2 தேடி தேடி அடையும்போது வாழ்க்கை இன்பமாகும் மனிதம் வளர்ப்பதும் மண்ணை காப்பதும் இறைவன் தான் மண்ணில் மனிதன் ஆவதும் புனிதன் ஆவதும் இறைவன் போட்ட தொரு கோலம் தான்
இதயம் முழுதும் இறைவன் தேடல் அகிலம் முழுதும் அருளின் பாடல் -2 உயிரில் உன்னை நான் உயிராய் கொண்டேன் விளையும் பயிரில் அழகை கண்டேன் -2 பேசும் கிளிகள் உனது தேடல் வீசும் காற்றில் உனது பாடல் கனவில் நினைந்து கலையில் வடித்து கருணை தேவன் அருகில் அணைக்கும் தேடல்
ஜெபத்தின் முயலில் காட்சி தேடல் ஜெபிக்கும் மனதில் மகிழ்ச்சி பாடல் -2 விடியும் பொழுதில் விடியல் காற்றே மலரும் இதழில் வாச முகர்வேன் -2 அசையும் கொடிகள் உமது தேடல் இசைக்கும் ஒலிகள் உமது பாடல் நினைவில் எழுதி நெஞ்சில் நிறுத்தி அன்பில் அழைத்து அருகில் அணைக்கும் தேடல்