தயாபரா கண்ணோக்குமே
thayaabaraa kannokkumae
1. தயாபரா கண்ணோக்குமே! உம்மாலேயன்றி சாகுவேன் என் சீரில்லாமை பாருமே! என் பாவம் நீக்கையா!
என் பாவம் நீக்கையா! (2) உம் ரத்தமே என் கதியே என் பாவம் நீக்கையா!
2. என் பாவ ஸ்திதி அறிவீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் அசுத்தம் யாவும் அழிப்பீர் என் பாவம் நீக்கையா!
3. மெய்பக்தி ஒன்றும் இல்லையே நற்க்ரியை வீண்ப்ரயாசையே உம் ரத்தத்தின் நிமித்தமே என் பாவம் நீக்கையா!
4. இதோ! நற்பாதம் அண்டினேன் தள்ளாமல் சேர்த்துக்கொள்ளுமே என்றைக்கும் பாதுகாருமே என் பாவம் நீக்கையா!