தயாபர இயேசுவே
thayaabara yesuvae
தயாபர இயேசுவே உம்மையல்லால் தரணியில் யாருண்டு நேசிக்கவே உந்தன் நாமம்! ஊற்றுண்ட தைலம்!
1. உத்தமரே உம்மை துதித்திடுவேன் கடந்த காலங்கள் கைவிடாதென்னை கண்மணி போல காத்தீரே கானக வழியில் கலங்கிடாமலே காரிருளில் என் தீபமானீர் தயாபரன்
2. மனிதன் மாறி மறைந்து போயினும் மாறிடார் நேசரே ஓர் போதுமே மறவேன் உன்னை நான் என்றால் மன்னவா மருளாது மண்ணில் ஜீவிப்பேனே தயாபரன்
3. அக்கினி சோதனை அலையென வந்தும் அக்கினி ஸ்தம்பம் முன் சென்றீரே அழிந்திடாது விசுவாச பாதையில் அந்தியம் வரை என்னைக் காப்பீரையா - தயாபரன்
4. நீசனும் எத்தனைப் பேர் சொல்லி அழைத்து நீடித்த கிருபையை பகர்ந்தீரல்லோ - நித்தமும் உன் மார்பில் சார்ந்து மகிழ சத்திய உபதேசம் ஈந்தீரன்றோ - தயாபரன்