தட்டித் தட்டி நிற்கிறார்
thattith thatti nirkiraar
1. தட்டித் தட்டி நிற்கிறார் காத்துக்கொண்டிருக்கிறார் பரதேசி போல வந்தும் ராஜனாய் இருக்கிறார் உள்ளமே இவ்வன்புணர்ந்து கதவைத் திறக்கப்பார்!
2. தட்டித் தட்டி நிற்கிறார் காத்துக்கொண்டிருக்கிறார் நிலையோரம் புல்முளைத்துக் கீலும் துருப் பட்டது கதவசையாமல் தங்கித் திறவாமற் போயிற்று!
3. தட்டித் தட்டி நிற்கிறார் காத்துக்கொண்டிருக்கிறார் சூட்டப்பட்ட சிரசுள்ளார்! காயப்பட்ட கைகள் பார்! நேச பார்வையுற்ற மீட்பர் இன்னும் காத்து நிற்கிறார்.
4. உள்ளே வாரும்! யேசுவே எந்தன் நெஞ்சில் தங்குமே திவ்ய அன்பை உணராமல் முன்னே வாசல் பூட்டினேன் இப்போதோ என் நேச நாதா உள்ளே வாரும்! வாருமேன்!