தருவேன் காணிக்கை
tharuven kaanikkai
தருவேன் காணிக்கை என்னை முழுமையாகவே - மனம் ( 2 ) இன்று மலராய் மலர்ந்து உன்னில் உயிராய்க் கலந்து வருவேன் உன் அன்பில் இணைந்து
குறைகளால் நிறைந்த என் உள்ளக்கறை நீக்குவேன் - 2 இறைவா வருவாய் என்னுள்ளம் உன்னில்லம் அறிந்தே2 ! உள்ளத்திலே உள்ளதெல்லாம் உனக்காய் தினம் கொடுத்தேன் ( 2 )
இரசத்துடன் நீர்த்துளிபோல் எனைச்சேர்த்து உம் ரத்தமாக்கும் ( 2 ) அப்பத்தில் எழுவாய் மாற்றிடும் நல்திரு உணவாய் - 2 என்னிடத்தில் ஏதுமில்லை உன்னிடம் என்னை அளித்தேன்