தண்ணீரை கடக்கும் போதும்
thanneerai kadakkum podhum
தண்ணீரை கடக்கும் போதும் என்னோடு இருப்பவரே வெள்ளங்கள் புரளாமல் என்னை என்றும் காப்பவரே-2 அக்கினியில் நடந்தாலும் சோதனைகள் சூழ்ந்தாலும் தப்புவித்து காப்பவரே-என்னை அன்பால் அணைப்பவரே-2
1.எரிகோவின் மதில்களெல்லாம் உடைத்தவரே-எங்கள் வாழ்விலும் எதிர்த்து நிற்கும் தடைகளை உடைப்பீரே-2 கானானை சொந்தமாய் தேவ ஜனம் பெற்றனரே பரலோக கானானை எங்களுக்கும் தருவீரே-2-தண்ணீரை
2.பார்வோனின் சேனை எல்லாம் தொடர்ந்த போதும்-பெரும் செங்கடலை பிளந்து உம் ஜனத்தை நடத்தினீரே-2 பகலிலே மேகஸ்தம்பம் இரவிலே அக்கினிஸ்தம்பம் அற்புதமாய் நடத்தினதே எங்களையும் நடத்துவீரே-2-தண்ணீரை