தனிமையில் இருந்தேன்
thanimaiyil irundhen
தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் - 2 என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே (தைரியம் தந்திரே) - 2
நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே - 2
1 தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே - 2 கன்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே - 2
2 பாவத்தை தேடியே நான் தினம் தினம் அலைந்தேனே பரிசுத்த தேவனெ நான் உம்மை மறந்தேனே பாரினில் எங்கும் மரண ஒலி கேட்டதே - இந்த - 2 தயவாய் என்னை மட்டும் (உந்தன்) கிருபை காத்ததே -2
3 வாழ்வை உமக்கே நான் இன்று அர்பணிக்கின்றேனே சீர்படுத்தி என்னை உமக்கே பயன்படுத்துமே உலகினில் எங்கும் நல்ல (உந்தன்) செய்தி கூறுவேன் - 2 ஓட்டத்தை முடித்து கொண்டு (நான்) சீயோன் சேருவேன் - 2
இயேசு வருகிறார் எஙகள் இயேசு வருகிறார் ஆயத்தமாகிடுவோம் (உடன் ) செல்ல ஆயத்தமாகிடுவோம - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 4 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே - 2