தங்கமும் தூபவர்க்கமும்
thangamum thoobavarkkamum
தங்கமும் தூபவர்க்கமும் வெள்ளைப்போளம் காணிக்கைகளும் இயேசப்பா விரும்பவில்லையே உன் ஐஸ்வர்யமும் பேர் புகழும் நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானதல்ல முக்கியமல்லவே
பலிகளை பார்க்கிலும் கீழ்ப்படிதலே மேன்மை அர்ப்பணித்திடு உந்தன் இதயத்தை-தங்கமும்
1.எளிய ஊராய் இருந்த பெத்லகேமிலிருந்து எழும்பின யூத சிங்கமே எளியவளாய் இருந்த மரியின் கருவிலிருந்து உதித்த ஜீவ வார்த்தையே
மானிடனானார் மகிமை நிறைந்தவர் பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்-2-தங்கமும்
2.சொந்த பிள்ளையென்றும் பாராமல் இயேசுவை நமக்காய் ஒப்புக்கொடுத்தார் அவரோடு கூட அனைத்தும் நமக்களிப்பார் கடைசி நாள் வரைக்கும்
பாவமானார் பரிசுத்தர் இயேசு பாவிக்கு மேன்மையை தருபவர்-2-தங்கமும்