தங்க கட்டியே யூத
thanga kattiyae yoodha
தங்க கட்டியே யூத சிங்கக்குட்டியே என் பாவம் போக்கபொறந்திருக்கும் ஆட்டுக்குட்டியே தங்க கட்டியே யூத சிங்கக்குட்டியே என் மனசெல்லாம் நெறஞ்சிருக்கும் வெல்லக்கட்டியே
தந்தானே பாட்டுப்பாடுவேனே எனக்கு எல்லாம் தந்த இயேசுவையே பாடிடுவேனே
தித்திக்கும் கொம்புத்தேனே உம்மை எத்திக்கும் சொல்லுவேனே ஜீவன் தந்த உம்மைத்தானே உம்மை ஓயாமல் பாடிடுவேனே
நெஞ்சில் நெறஞ்ச செல்லமே பசும் பால் போல வெள்ளை உள்ளமே வாழவைக்கும் நல்லதெய்வமே உம்மை வாழ்த்தும் போது இன்னல் நீங்குமே
மண்ணில் வந்த மாணிக்கமே உம்மை கண்ட கண்கள் பூரிக்குமே தேடிவந்த கோடி இன்பமே உம்மை பாட பாட உள்ளம் பொங்குமே