தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
thandhitta porutkal yaavaiyum eduthu
தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் ( 2 )
வழங்கிட கனியோ உணவோ இன்றி ! வாடிடும் வறியோர் பலர் இறைவா ( 2 ) - வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி வேறெதும் அல்லா நிலை இறைவா
உனக்கென என்னை வழங்கிடும் வேளை உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் ( 2 ) - எங்கள் மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர்தம் மனத்துயர் நீங்க படைக்கின்றோம்