தந்தாளும் இயேசுவே உம்
thandhaalum yesuvae um
தந்தாளும் இயேசுவே உம் சமூகம் தேவ மைந்தர்கள் கூடிடும் இந் நேரமிதில்
1. பத்மு தீவில் பரிசுத்தக் காட்சி இந்த வண்ணமே புத்திரர்கள் மத்தியிலும் உந்தன் திவ்ய தரிசனம் இத்தினத்தில் இங்கு ஈந்திடும் -தேவா!
2. நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும் கல்வாரியின் அன்பு இன்று கர்த்தனே நீர் காட்டி - நற்குணம் அவர்க்கு நல்கிடும் -தேவா!
3. சக்தி இல்லை எங்களுக்கு, சாம்பலும் தூசியும் கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம் புத்தியாக யுத்தம் செய்திட-தேவா!
4. என்னை நோக்கிக் கூப்பிடு அழித்திடுவேன் உத்திரம் பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன் என்றவா! இந்நேரம் காட்டுமே-தேவர்
5. சதா காலங்களிலும் இருப்பேன் உங்கள் கூடவே ! சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் அணுகாது என்றார் ஆதலால் அனந்தம் ஸ்தோத்திரம் - தேவா