தன் மணவாளனுக்காக
than manavaalanukkaaga
தன் மணவாளனுக்காக அலங்கரிக்கபட்ட தேர் பொன்னொளி நேர் புரியாய் புதிய எருசலேமே நான் மணவாளியாக இறங்கிடுதே - இறங்கிடுதே
பன்னிரு அஸ்திபாரம் அப்போஸ்தலர் தீர்க்கரேகை தன்னிகரில்லா கிறிஸ்து மூலைக்கல்லாகவே வச்சிரக் கல்லைப் போல பிரபையும் வீசுதே வசித்திடுவார் தேவன் நிதமதிலே - தன்
தேவ மகிமையே அதிலொளி வீசுதே தேவாட்டுக்குட்டி அதின் மங்கிடா விளக்கே இராக்காலமேயில்லாத இன்பரின் நகரே இணையற்ற கர்த்தரின் கைப்பணியே - தன்
ஆட்டுக்குட்டியின் ஜீவ புஸ்தகத்தில் நாமமுள்ளோரே சதா அதிலே வசிப்பவர் அருவருப்பானது மெத் தீட்டுள்ள தொன்றுமே பிரவேசிப்பதில்லையே இனி அதிலே - தன்
கரை திரை குறை ஏதும் அறவே அற்ற சபை தரித்து நின்றிலங்குதே கிறிஸ்துவின் மகிமை திரு வசனத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் மறுரூபமானார் கண்மணியே - தன்
கிருபையினால் பிறந்து புதிய எருசலேமே திருசித்தம் செய்தென்றுமே நின்ற ரசாளுமே கிறிஸ்துவின் பூரணமே நிறை அலங்காரமே நினைக்க அருமையே தன் ஜெயத்தினையே - தன்