தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கு
thammaith thedugira aathumaavukku
தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கு கர்த்தர் நல்லவர் தமக்குக் காத்திருக்கும் அனைவருக்கும் கர்த்தர் நல்லவர் -2
கர்த்தர் நல்லவர், கர்த்தர் நல்லவர் அவரைப் பற்றிக் கொள்ளும் அனைவருக்கும் கர்த்தர் நல்லவர் -2
நம்பிக்கையோடு இரட்சிப்புக்கு காத்திரு நல்லது - 2 இளம்பிராயத்திலே நுகத்தடியை சுமப்பதும் நல்லது - 2
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடவே மாட்டார் - 2 சஞ்சலப்படுத்தினாலும் தம் கிருபையினால் உனக்காக இரங்குவார் - 2
வழிகளை ஆராய்ந்து சோதித்து கர்த்தரிடம் திரும்புவோம் - 2 நமது கைகளையும் இருதயமும் பரலோகம் ஏந்துவோம் - 2