தலையை உயர்த்திடும்
thalaiyai uyarthidum
தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே வாழ்வை மாற்றிடும் என் இராஜன் நீரே – 2 மேன்மைப்படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே – 2
என் இயேசுவே எந்தன் ஆதரவே என்னை காப்பவரே – 2
1. கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து என்னை காத்திடுவார் அவர் கரத்தால் என்னை பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்
கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து என்னை காத்திடுவார் தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்
அவர் அன்பால் என்னை அரவணைத்து தூக்கி (தோளில்) சுமந்திடுவார்
2. கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும் கைவிடமாட்டார் அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக) எல்லாம் செய்து முடிப்பார் – 2 அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார் பெலப்படுத்திடுவார் – 2