தலைமுறையாய் என்றென்றுமாய்
thalaimuraiyaay endrendrumaay
தலைமுறையாய் என்றென்றுமாய் தேவன்எம் அடைக்கலமானவரே தஞ்சம் அவரே திரும்பிடுவோம்
பூமி உலகம் உருவாகும் முன்னே ஆமிவர் அநாதி பிதா - நேற்றுக் கழிந்த நாள் போலவர் முன் நீண்ட ஆயிரம் ஆண்டுகளே
காலை முளைத்து பூத்திடும் புல்லே மாலை நேரம் உலர்ந்திடுதே - வாடும் மனிதர் நாட்கள் மறையும் - வெள்ளம் போல் எம்மை வாரிக் கொள்வார்
உந்தன் முகத்தின் வெளிச்சத்திலே நீர் எந்தன் பாவம் நிறுத்தினீரே தேவகோபத்தால் மாயக்கதை போல் பாவ வருடங்களைக் கழித்தோம்
எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டே எண்பதாண்டோ பெலன் இருந்தால் ஞான இதயம் தேவ உணர்வும் நாட்கள் எண்ணிட போதித்திடும்
கர்த்தரே நீர் திரும்பியே வாரும் கோபம் நீங்கி பரிதபியும் துன்பம் அடைந்த நாட்கள் பதிலாய் இன்ப மகிழ்ச்சி ஈந்திடுமே
உந்தன் கிரியை ஊழியர்க்கே தான் உம் மகிமை பிள்ளைகட்கே எங்கள் கரத்தின் நற்கிரியைகள் என்றும் உறுதி செய்தருளும