தலை நிமிர செய்தார்
thalai nimira seydhaar
தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார் இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார் என்னை மகிழ செய்தார். இனி என்றும் பயம் எனக்கில்லையே
(கிருபையால் எல்லாம் அருளினார் கிருபையால் என்னை உயர்த்தினார்)-2 (நம்கர்த்தர் நல்லவரே)-2
சிலுவையில் எந்தன் சிறுமையை சிதைத்திட்டார் ராஜனே வெறுமையை வேறோடு அறுத்திட்டார் வெற்றியின் தேவனே
கைகளில் பாய்ந்த ஆணியால் என் கரம் பிடித்தாரே இரத்தம் பாய்ந்த தம்காலினால் என்ன நடக்க செய்தாரே
குகைகளில் ஒழிந்து கிடந்தேனே அரண்மனை தந்தாரே வெட்கத்தை அவர் மாற்றினார் நம்பினேன் விடுவித்தார்
எதிரிகள் முன் புயத்தினால் என் தலையை நிமிர செய்தார் உத்தமம் அவர் வார்த்தைகள் செய்கைகள் சத்தியம் (நம்கர்த்தர் நல்லவரே-2)