தகுதி இல்லாதிருந்தும்
thagudhi illaadhirundhum
தகுதி இல்லாதிருந்தும் என்னை தேடினீர். பாவியாக இருந்தும் என்னையும் அழைத்தீர். தகுதி இல்லாதிருந்தும் என்னை தேடினீர். பாவியாக இருந்தும் என்னையும் அழைத்தீர்.
துரோகி என்றார்கள் துஷ்டன் என்றார்கள் எதிரியாக நினைத்து எட்டிச்சென்றார்கள் நீங்க வந்தீங்க வாழ்வு தந்தீங்க. குனிஞ்சிருந்த என் தலைய நிமிரச் செஞ்சீங்க
என்ன போல மக்கள் வேறாரையும் ஒதுக்கவில்ல நான் செய்யும் தவற என் நெஞ்சமும் ஒத்துக்கவில்ல ஒதுக்கி வச்ச என்ன நீங்க ஒத்துக்க வச்சீங்க ஆண்டவரே உங்க வழிய கத்துக்க வச்சீங்க
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா சந்தோசமே என் நெஞ்சில் எப்போதும் உம் வாசமே அல்லேலூயா அல்லேலூயா சந்தோசமே என் நெஞ்சில் எப்போதும் உம் வாசமே
நேரான பாதையில ஒரு நாளும் போனதில்ல சேரான வாழ்க்கையில துளியும் இறக்கமில்ல கூரான என் நுகத்த உடைச்சு விட்டீங்க புதிசா என்ன படைச்சு விட்டீங்க
அல்லேலூயா அல்லேலூயா சந்தோஷமே என் நெஞ்சில் எப்போதும் உம் வாசமே அல்லேலூயா அல்லேலூயா சந்தோசமே என் நெஞ்சில் எப்போதும் உம் வாசமே
செல்வங்கள் இருந்தாலும் நிம்மதி கிடைச்சதில்ல வயிரார உண்டாலும் மனசு நிறைஞ்சதில்ல என்னை பின்பற்று என்று சொன்னீங்க என்னுள்ளே மாற்றத்தை உண்டுபண்ணீங்க
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா சந்தோசமே என் நெஞ்சில் எப்போதும் உம் வாசமே அல்லேலூயா அல்லேலூயா சந்தோசமே என் நெஞ்சில் எப்போதும் உம் வாசமே
தகுதி இல்லாதிருந்தும் என்னை தேடினீர். பாவியாக இருந்தும் என்னையும் அழைத்தீர். தகுதி இல்லாதிருந்தும் என்னை தேடினீர். பாவியாக இருந்தும் என்னையும் அழைத்தீர். அல்லேலூயா அல்லேலூயா சந்தோசமே என் நெஞ்சில் எப்போதும் உம் வாசமே...