தகப்பனே தந்தையே
thagappanae thandhaiyae
தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே நீர் போதும் என் வாழ்விலே – 2 அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன் சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன் – 2
1. உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே – 2 தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கிறேன் – 2
2. ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ண்ட பரிமளமே திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே – 2 தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கின்றேன் – 2