தாழ்வில் என்னை நினைத்தவரே
thaazhvil ennai ninaithavarae
தாழ்வில் என்னை நினைத்தவரே துதித்துக்கொண்டே இருப்பேன் தாழ்ந்த என்னை உயர்த்தினீரே துதித்துக்கொண்டே இருப்பேன்
துதித்துக்கொண்டே இருப்பேன் உயிருள்ள நாட்களெல்லாம் நன்றி சொல்லி பாடிடுவேன்
1.நீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையை பெரிதாக்கினீர் நான் பெருகிகொண்டயிருப்பேன்
2.என் கொம்பை உயர்த்தினீரே உம்மை நான் உயர்த்திடுவேன் நான் குனிந்து நடப்பதில்லை
3.வற்றாத நிரூற்றைப் போல் என்றென்றும் செழித்திருப்பேன் நான் மிகுந்த கனி கொடுப்பேன்
4.என் உத்தமத்தை நினைப்பவரே விண்ணப்பத்தை கேட்பவரே நலமானதை செய்வீரே
5.நீர் எனக்கு பாராட்டின உம் கிருபையை நினைத்திடுவேன் இரட்சிப்பினால் மகிழ்ந்திடுவேன்