தாய்மடி போலவே என் இயேசுவே
thaaymadi polavae en yesuvae
தாய்மடி போலவே என் இயேசுவே உம் மடி தேடி நானும் வந்தேன் ஐயா - 2 தாயைப் போலவே என்னை தேற்றுவீர் தாயைப் போலவே என்னை தாங்குவீர் - 2 நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேன் ஐயா - 2
நம்பின உறவுகள் உடைந்தே போனதையா நம்பின வார்த்தைகளும் சிதைந்தே போனதையா - 2 உடைந்து போனேன் ஐயா சிதைந்து போனேன் ஐயா - 2 நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேன் ஐயா - 2
பாசம் காட்டியே மோசம் செய்தனர் பாதாளம் வரை என்னை உதறித் தள்ளினர் - 2 தோற்றுப் போனேன் ஐயா தனிமையானேனையா - 2 நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேன் ஐயா - 2