தாய்க்கு அன்பு வற்றிப்போகுமோ
thaaykku anbu vatrippogumo
தாய்க்கு அன்பு வற்றிப்போகுமோ தனது பிள்ளை அவள் மறப்பாளோ தாய்மறந்தாலும் நான் மறவேனே தயவுள்ள இறைவன்தான் உரைத்தாரே
குன்று கூட அசைந்து போகலாம் குகைகள் கூட பெயர்ந்து போகலாம் அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே அசைவதில்லை பெயர்வதில்லையே
தீ நடுவே நீநடந்தாலும் ஆழ்கடலைத் தான் கடந்தாலும் தீமை ஏதும் நிகழ்வதில்லையே தீதின்றியே காத்திடுவேன் நான்
கழுகு சிறகில் குஞ்சை அமர்த்தியே கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே கழுகைப் போல் நான் உனைத்தானே காலமெல்லாம் சுமந்து செல்வேனே
உன்னை அன்று மீட்டதும் நானே உரிய பெயரில் அழைத்ததும் நானே என்னைக் கண்டு வந்ததனாலே என்றும் நீயே எனக்குச் சொந்தமே