தாயின் கருவில் உமக்காக
thaayin karuvil umakkaaga
தாயின் கருவில் உமக்காக அறிந்தீரே பாவி என்னை பாரில் மீட்க வந்தீரே-(2) உம் ஜீவனையும் எனக்காக தந்தீரே(2) அன்பை விட்டு எங்கு நான் ஓடுவேன்... (உங்க அன்பை மட்டும் என்றும் நான் நாடுவேன்)
இயேசுவே..... இயேசுவே... இயேசுவே ஆத்ம நேசரே (2)
1) யோனாபோல திசை மாறி ஓடினேன் மீனின் வயிற்றில் மீறுதலால் சிக்கினேன் (2) உம்மைப் போல என்னை மாற்ற வந்தீரே பாவமாந்தர் மீட்க என்னை அழைத்தீரே (2)
2) மறுதலித்த பேதுருபோல் வாழ்ந்தேனே மனங்கசந்து அழுதபோது கண்டீரே (2) எனக்காக சிலுவையில் மரித்தீரே பரலோக திறவு கோலைத் தந்தீரே (2)
3) சிம்சோன் போல இச்சையாலே விழுந்தேனே சிட்சையினால் சிக்கினானும் தவித்தேனே (2) ஆனாலும் கரம் நீட்டி அனைத்தீரே அழகான வாழ்வு எனக்கு தந்திரே(2)