தாயின் கருவில் கண்ட தேவா
thaayin karuvil kanda devaa
தாயின் கருவில் கண்ட தேவா என்னை அறிந்து அழைத்த தேவா- 2 உம்மை துதிக்கவே இந்த நாவு போதாதே உம் புகழை சொல்லவே இந்த வாழ்வு போதாதே
இந்த ஜீவிதத்தில் சோதனை உண்டு அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு - 2 அழைத்த தேவன் உண்மையுள்ளவர் சொன்னதை என்றும் செய்து முடிப்பவர் காத்து நடத்திடுவீர்
தூஷிக்கும் மனிதர் இங்குண்டு அதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு - 2 நித்தம் உந்தன் பாதை நடப்பேன் உந்தன் அன்பை பாடி துதிப்பேன் சோர்ந்து போவதில்லை