தாய் மறந்தாலும் அவர் உன்னை
thaay marandhaalum avar unnai
தாய் மறந்தாலும் அவர் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை உள்ளங்கையில் உன்னை வரைந்தவர் ஒருபோதும் விடுவதில்லை-2
ஆ.. அல்லேலூயா.. ஓ... ஓசன்னா-2-தாய் மறந்தாலும்
1.பெற்றோர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை கைவிட்டாலும்-2 உள்ளங்கையில் உன்னை வரைந்தவர் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய் மறந்தாலும்
2.நம்பினோர் கைவிட்டாலும் நண்பர்கள் விலகிட்டாலும்-2 நல்ல நண்பர் நம் இயேசுவே உன்னை ஒருபோதும் கைவிடாரே உண்மை நண்பர் நம் இயேசுவே உன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய் மறந்தாலும்
3.அன்பானவர் மறைந்தாரோ ஆதரவை இழந்தாயோ-2 ஆறுதலின் தேவன் இயேசுவே உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் உண்மை தேவன் நம் இயேசுவே உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்
தாய் மறந்தாலும் அவர் என்னை ஒருபோதும் மறப்பதில்லை உள்ளங்கையில் என்னை வரைந்தவர் ஒருபோதும் விடுவதில்லை-2
ஆ.. அல்லேலூயா.. ஓ... ஓசன்னா
தாய் மறந்தாலும் அவர் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை உள்ளங்கையில் நம்மை வரைந்தவர் ஒருபோதும் விடுவதில்லை அவர் ஒருபோதும் மறப்பதில்லை இயேசு ஒருபோதும் விடுவதில்லை