தாய் கூட பிள்ளைகளை
thaay kooda pillaigalai
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கம்கூட குட்டிகளைப் பட்டினி போடலாம்
தாயினும் மேலாக அன்பு வைத்தவர் இரத்தத்தையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ - 2 நம்பிக்கையை விட்டு விடாதே - நீ நம்பினவர் கைவிடமாட்டார்
நீ அவரை தெரிந்து கொள்ளவில்லை அவரல்லவோ உன்னைத் தெரிந்து கொண்டார் நேற்று அல்ல இன்று அல்ல தாயின் கருவில் தோன்றும் முன்னே
தேவன் உனக்குச் சொன்ன வார்த்தையெல்லாம் ஒன்றுகூட மாறிப் போவதில்லை நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் இயேசு மாறிடாரே - 2
நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால் உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை - 2
உன்னை என்றும் நேசிக்கின்ற தேவன் உன்னை விட்டு விலகிப்போவதில்லை நித்தம் உன்னை நடத்திடுவார் நித்தியத்தில் சேர்த்திடுவார் - 2