தாரும் சுத்த ஆவி தாரும் எங்கள் ஆத்துமத்திலே
thaarum sutha aavi thaarum engal aathumathilae
1. தாரும் சுத்த ஆவி தாரும் எங்கள் ஆத்துமத்திலே எங்களுக்குயிரைத் தாரும் பரிசுத்த ஆவியே! ஞான தீபம் ஞான தீபம் ஸ்வாமி நீரே ஏற்றுமே.
2. எங்கள் நெஞ்சில் நல்ல புத்தி தேவபக்தி தோன்றவே அதை நீர் குணப்படுத்தித் தப்புச் சிந்தையானதை மாற்ற தாரும் மாற்ற தாரும் நல்ல தேவ ஆவியே.
3. நீதிமார்க்கத்தில் எதிர்த்து நிற்கும் எவ்விரோதமும் நீங்க எங்களைக் காப்பாற்றி நல்லோராக்கியருளும். கால் தள்ளாடி கால் தள்ளாடிப் போகில் நீரே ரட்சியும்.
4. நெஞ்சு என்னிலே கலங்கி நாயனே! இரட்சியும் என்று கெஞ்சும் போதிரங்கி என்னைத் தேற்றிக் கொண்டிரும்.துன்பம் நீங்க துன்பம் நீங்க நீர் சகாயராய் இரும்.