தாமதமின்றி யேசுவைச் சேர்
thaamadhamindri yesuvais ser
1. தாமதமின்றி யேசுவைச் சேர் வேதத்தில் காட்டும் வழியே நேர் நம்மிடம் வந்தாரென்பதைத் தேர் வா என்னும் சொல்லைக் கேள்.
சேர்வோம் பார்ப்போம் களிப்புடனே சுத்தம் செய்த நெஞ்சருடனே என்றென்றைக்கும் யேசுவுடனே வாழ்வோம் சீர் அடைவோம்.
2. வா என்கிறார் வேண்டாம் என்னாதே பேரின்பானந்தம் இகழாதே. யேசுவோடமர் ஆத்துமாவே போக்குச் சொல்லாதிரும்.
3. இவ்விடம் வந்த யேசுவைப் பார் மீட்பின் காரணர் மார்பிலே சார் தயவாய் உன்னை வா என்கிறார் தடை செய்யாதிரு.