தாமதமேனோ தருணமிதே
thaamadhameno tharunamidhae
தாமதமேனோ தருணமிதே தள்ளிடாதே வருவாய் இயேசு பரன் தாங்கிடுவார் உன்னையே
காயங்கள் காட்டி கன்மலை கிறிஸ்து கனிவுடன் உன்னை அழைக்கிறார் கர்த்தர் மாறிடா அன்பினை ருசிக்க கல்வாரி அண்டையில் வந்திடுவாய் - தாம்
காணாத ஆட்டை போல் நீ அலைவானேன் கானக வழிதனில் உரமுமின்றி தேடி வரும் இயேசு மேய்ப்பர் சத்தம் கேட்டவர் வார்த்தைக்கு கீழ்ப்படிவா - தாம்
மண்ணில் உன் சரீர ரோகங்கள் மாற்ற புண்ணியர் இயேசுன்னை அழைக்கிறாரே எண்ணிடாதவரின் வல்லமை ருசிக்க விண்ணவர் கரத்தில் நீ வந்திடுவாய் - தாம்
கிறிஸ்துவின் மரண சாயலில் இணைய பிறந்திடுவாய் ஜல ஸ்நானத்தினால் பூரணனாக வளர்ந்திடத் தேவ சாயலைத் தரிப்பாய் அபிஷேகத்தால் - தாம்
நேற்று என்றென்றும் மாறிடா நேசர் மாற்றிடுவார் தம் வார்த்தையை குற்றம் குறைகள் யாவும் அகற்றியே முற்றும் முடிய உன்னை இரட்சிப்பாரே - தாம்