தாமதமேனோ அழைக்கிறாரே
thaamadhameno azhaikkiraarae
தாமதமேனோ அழைக்கிறாரே ஓ! திரும்பியே வந்திடுவாய் - நீ பாவத்தின் இன்பம் தள்ளிடுவாய் - இதோ நாட்களும் சென்றிடுதே
1. அழைக்கிறார் . கனிவுடன் - வா அலையாது இயேசு ஆயனண்டை நீ மேய்ச்சலுக்கு கண்டடைவாய்
2. வாழ்வு நிழல் போல் சாய்ந்திடுமே பாழ் உலகின் மாயையிலே - ஓ! அழிவே அடுத்து வந்திடுதே - அவர் அழைப்பை அறிந்திடுவாய் - அழை
3. சீர்குலைந்த லையும் மானிடரை நேர் பாதை சேர்த்துவிடுவார் - ஆ! பார் உன் மீட்பர் இரட்சிப்பை - ஓர் போதும் நீ இழந்து விடாதே - அழை
4. ரோகதினாலோ வாடுவதேன்? மரித்தாரே உனக்காக - நீ விரைவாக இன்றே கண்டிடுவாய் - ஆம் பெறுவாய் சுகமதையே - அழை
5. மோட்சத்தின் பாக்கியம் எண்ணிடாயோ அக்காட்சியைக் கண்டிடாயோ - தாம் பட்சமாய் உன்னை ஏற்றுக்கொள்ள - நல் அட்சயன் அழைக்கிறாரே - அழை