தாகத்தை தீருமய்யா
thaagathai theerumayyaa
தாகத்தை தீருமய்யா அபிஷேகத்தைத் தாருமையா - எங்கள்
1. ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம் ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ ஏக கர்த்தாவே ஏழைகள் மீது இரங்கிடும் இப்போதே - எம்மில்
2. சத்துருவாலே சகிக்க வொண்ணாத எத்தனையோ இடர் வந்ததையோ அத்தனே உமது அருள் பலத்தாலே நித்தமும் ஜெயம் கொள்வோம் நாங்கள்
3. வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல போதகராம் ஆவியானவரே பாதத்தில் வீழ்ந்து பணிந்திடுவோமே பரிசுத்த மாவோமே - நாங்கள்
4. சுத்த ஜீவியமும் தூய ஊழியமும் கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம் சித்தங் கொண்டெம்மை நீர் பாவிப்பதால் மெத்தவும் பலன் காண்போம் நாங்கள்