ஸ்வாமி வான் இரும்பையும்
svaami vaan irumbaiyum
1. ஸ்வாமி வான் இரும்பையும் பூமி வெண்கலத்தையும் போன்றதால் எம் பாவத்தை நீக்கி கேளும் ஜெபத்தை.
2. ஏரி குளம் ஆறுகள் எங்குமுள்ள ஜீவன்கள் யாவும் மாரிக்காகவே வாஞ்சையுற்று ஏங்கிற்றே.
3. மாந்தர் கொடும் பசியால் வாடிப் பெலவீனத்தால் தொய்ந்து தொய்ந்து போகிறார் நித்தம் நித்தம் சாகிறார்.
4. உம்மையன்றிப் பஞ்சத்தை நீக்கி எங்கள் பசியைத் தீர்க்கும் ஜீவதாரகர் இல்லை நீரே ரட்சகர்.
5. தயையுள்ள தேவனே யேசுவின் நிமித்தமே மேகத்துக்குக் கற்பியும் சோனாமாரி பொழியும்.
6. அதனால் பூமி குளிரும் நிலம் பலனைத் தரும் தேசம் எங்கும் செழிக்கவே யாவும் உம்மைத் துதிக்கும்.